Saturday, May 9, 2009

உறங்கிடு என் தோழியே!!

இறைவன்
நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம்
நம் துணை அதைவிட அழகென்று
தெரியத்தான்;

நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம்
செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின்
வெளிச்சம் காட்டத் தான்;

உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு
பாடம் புகட்டத்தான்
மேகம் நிலவினை மறைக்கிறது
அதன் காரணம்
எதுவும் நிலையல்லவே!

கனவினில் நிஜங்களை உணர்வதனால்
நிஜங்களை கனவாக மாற்ற முடியாது
காரணம்
இது நிழல்படமில்லாத நிஜப்படம்;

உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள்
அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்;

இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;

ஒய்வெடுக்கும் நேரத்தில் 
இந்த கவித் தாலாட்ட
உறங்கிடு என் தோழியே!

- ஷேக் இப்ராஹிம்

2 comments:

  1. //இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
    உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;//

    யெஸ்..

    ReplyDelete
  2. /இது நிழல்படமில்லாத நிஜப்படம்//

    அழகான கவிதை

    ReplyDelete